தமிழ்நாட்டில் உள்ள 4000 – க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தினம் தோறும் 100 கோடிக்கும் மேல் வருவாயை ஈட்டி வருவதாக புள்ளிவிபரம் கூறப்படுகிறது. டாஸ்மார்க் கடைகள் அனைத்து நாட்களிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் சில முக்கிய தினமான குடியரசு தினம். காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் சில முக்கிய தினங்களில் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15 – ஆம் தேதி 78 – வது சுதந்திர தினமானது கொண்டாடப்பட உள்ளது. இதை தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மார்க் கடைகளும் அன்று ஒரு நாள் மூடப்படும் என்று அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் 15 – ஆம் தேதி சுதந்திர தின அன்று தடையை மீறி திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.