நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நல குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதை தொடர்ந்து அவரது இறப்பிற்க்கு லட்சக்கணக்கில் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். மேலும் நடிகர்கள் விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மத்திய அரசு கேப்டன் விஜயகாந்தை கௌரவிக்கும் விதமாக பத்மபூஷன் விருது வழங்குவதாக அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று டெல்லி புறப்பட்ட சென்றுள்ளார்.
விமான நிலையத்திலிருந்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கேப்டன் விஜயகாந்த் டெல்லியில் பத்மபூஷன் விருது வழங்க இருப்பதால் டெல்லி புறப்பட்ட சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து வருகின்ற 10 – ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் கேப்டனுக்கு பாராட்டு விழா நடக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.