தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் பல்வேறு கட்சி தரப்பிலிருந்தும் பிரச்சாரமானது தீவிரமான முறையில் நடைபெற்று வருகிறது. பிரச்சாரம் ஒரு புறம் இருக்க மறுபுறம் தேர்தல் பிரிவினர்கள் சார்பில் பொதுமக்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வாக்களிக்க வருவதற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் தேர்தல் பிரிவினர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையம் மற்றும் பிற இடங்களில் வாக்களிப்பது பற்றிய அவசியத்தை தேர்தல் பிரிவினர்கள் விழிப்புணர்வு வீடியோவாக ஒளிபரப்பு செய்கின்றனர். இதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாகவும் பொது மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை பற்றி எடுத்துரைத்து வருகின்றனர்.
பொள்ளாச்சி பகுதியில் நேற்று திருமணத்திற்கு அழைப்பு விடுப்பது போல் தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு பூ பழம் என முழு மரியாதையுடன் பொதுமக்களை அதிகாரிகள் தேர்தல் நாளன்று வாக்களிக்க வருவதற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். 50 சதவீதத்திற்கு குறைவாக வாக்களிக்கும் இடங்களை கண்டறிந்து அதிகாரிகள் அங்கு சென்று வீடு வீடாக பொதுமக்களிடம் தேர்தலின் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இன்னும் சில பகுதிகளில் மனதை வருடும் விதமாக தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு பூ பழ வகைகள்மற்றும் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வைத்து வீடு வீடாகச் சென்று அதிகாரிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.