தற்போது இருக்கும் அனைவரும் வாகனத்தை ஓட்டும் பொழுது கழுத்தில் [Wireless] ஹெட்செட் அல்லது [Earphone] மாட்டிக்கொண்டு தொலைபேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுகிறார்கள். இதனால் எளிதில் விபத்துக்கள் ஏற்படுகிறது.
மேலும் வாகனத்தை ஓட்டும் பொழுது தொலைபேசியில் பேசியவாரும்,கழுத்தில் ஹெட்செட் அணிந்து ஜாலியாக வாகனத்தை ஓட்டிவருகிறார்கள் இதனால் கவனம் சிதறுகிறது இதனால் அதிக அளவு விபத்து உண்டாகிறது.
தற்போது ஆந்திராவில் போன் ஹெட்செட் மாட்டி செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுவதாக போலிசார் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.எனவே இதைதொடர்ந்து போலிசார் மாநில அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.அந்த அறிக்கையில் இன்னிமேல் இயர் போன் ,ஹெட்செட் அணிந்து வாகனத்தை இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த அறிக்கையின் மூலம் விபத்துக்கள் குறைக்க முடியும் என்று தெரிவித்து இருந்தனர்.இதன் அடிப்படையில்,ஹெட்செட் அணிந்து ஜாலியாக வாகனத்தை ஓட்டும் நபர்களுக்கு 2ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.இந்த விதி வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கார்,ஆட்டோ,பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதி நடைமுறைக்கு வந்த பிறகு விபத்தின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இந்த புதிய கட்டுப்பாடு காரணமாக இன்னிமே யாரும் வாகனம் ஓடும் பொழுது ஹெட்செட் அணிந்து ஜாலியாக வாகனத்தை ஓட்டி செல்ல முடியாது.