புதிய பென்சன் திட்டம்
புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த போவதாக அரசு முடிவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்கள் வருமானத்தில் 40–45 விகிதம் பென்சனாக கிடைக்கும் என்று என்று கூறியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி அடிப்படை சம்பளத்தில் 10% பென்சனுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும் என்றும் இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் தந்தை வருவாயை பொறுத்தே கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.
இது போக மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவில்லை படி உயர்வோடு சேர்த்து எச் ஆர் ஏ உயர்வுக்கு இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன அதன்படி தற்போது எக்ஸ், ஒய், இசட் என்று மூன்று பிரிவுகளில் எச்ஆர்ஏ சம்பளம் தரப்படுகிறது.
அதன்படி, 27 சதவிகிதம், 18 சதவிகிதம், 9 சதவிகிதம் ஆக இருக்கும். இதில் எல்லா பிரிவிற்கும் தலா 3 சதவிகிதம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாத தொடக்கத்திலேயே அகவிலைப்படி உயர்வு இருக்கும் எனக் கூறப்படுகிறது.