சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றம் இல்லாத நிலையில் தற்பொழுது மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்துள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பின்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்பொழுது குறைந்துள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் தலா ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மதிய பெட்ரோலிய மந்திரி ஹர்தீப் சிங் அவரது எக்ஸ் வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிட்டுள்ளார்.