நாடாளுமன்ற தேர்தலானது நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த 7 கட்ட தேர்தல் முடிவுகளும் நேற்று வெளியிட்ட நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவானது 240 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜகவுடன் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி மட்டும் இந்தியாவில் 92 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டில் பிரதமராக ஆட்சி அமைக்க தேவைப்படும் 272 இடங்களை எந்த கட்சியும் பெற்றிடாத நிலையில் பெரும்பான்மையை கணக்கில் கொண்டு தற்பொழுது கூட்டணி கணக்குகள் நாட்டில் துவங்கி உள்ளது.
இன்று டெல்லியில் இரண்டு கூட்டணி தலைவர்களும் முக்கிய தலைவர்களைக் கொண்டு கூட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து நரேந்திர மோடி குடியரசு தலைவரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளார் மேலும் ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் நரேந்திர மோடி வருகின்ற 8 ஆம் தேதி பதவியேற்க இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.