கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வெளியிட்ட தகவலின் படி ஈஷா யோகா மையத்தில் இன்று அதிரடி விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் ஈஷா மையத்திற்கு அவரது இரு மகள்களையும் மீட்டு தர கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து உள்ளார். அந்த மனுவில் இவரது இரு மகள்களும் கட்டாயத்தின் பெயரில் ஈஷா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மனுவில் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தீவிர விசாரணை செய்து வருகின்ற நான்காம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனிடையே இன்று கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் ஈஷா யோகா மையத்திற்கு சென்று அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈஷா யோகா மையத்தில் தங்கி இருக்கும் துறவிகள் மற்றும் அலுவலர்களிடையே பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் துறவிகள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து காமராஜரின் இரு மகள்களும் கீதா மற்றும் லதாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.