தை பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வழங்கப்படும் என்றும் அதற்கான டோக்கன் தயார் நிலையில் இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகப்பாக பச்சரிசி 1 கிலோ, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் இதற்காக மக்கள் ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்கு டோக்கன் முறையை பின்பற்றப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. டோக்கன் முறைப்படி தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்படும் என்றும் இதனால் கூட்டல் நெரிசலை தவிர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் ஒரு சில நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பை பற்றிய முழு விபரங்களும் தமிழ்நாடு அரசு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.