தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயும் அதனுடன் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றை பரிசுத்தொகப்பாக வழங்கி வந்த நிலையில். இந்த வருடம் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரொக்க பணம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும். அதனுடன் அரிசி, கரும்பு, சர்க்கரை வழங்கப்படும் என்றும். மேலும் மகளிர் உரிமை தொகை ரூ. 100- வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.