தமிழரின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் அதனுடன் ரொக்க பணம் ரூ.1000 வருடா வருடம் வழங்கப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து இந்த வருடமும் அதே போல் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில தகவல்களை வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 37,000 ரேஷன் கடைகள் இருப்பதாகவும் இதன் மூலம் 1. 14 கோடி மக்கள் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து ரேஷன் கடைகளிலும் எப்பொழுதும் அரிசி பருப்பு மக்களுக்கு கொடுப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் தகவலை தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் சிறப்பு தொகுப்பை விவரத்தை வருகின்ற வாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தகவலை வெளியிடுவார் என்றும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.