உயர் கல்வித் துறையில் அமைச்சராக இருந்த பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில் அமைச்சராக இருந்த பொன்முடி எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அமலாக்க துறையின் மூலம் குற்றம் சாற்றப்பட்ட பொன்முடி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதை தொடர்ந்து உச்சநீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்டு 3 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் திருக்கோவிலூர் எம்எல்ஏ – வாக இருந்து வந்த பொன்முடி மேலும் அமைச்சர் பதவியில் தொடர்வதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையின் படி பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக ஆளுநர் ரவிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை தொடர்ந்து ஆளுநர் ரவி பொன்முடிக்கு அமைச்சர் பதவிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை தொடர்ந்து ஆளுநர் ரவி, டெல்லி புறப்பட்டு சென்ற நிலையில் நேற்று சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தபோதிலும் பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்கிலிருந்து அவர் முழுமையாக விடுவிக்கவில்லை போன்ற காரணத்தை கொண்டும் ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பதாக ஆளுநர் ரவியின் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.