பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வந்தடைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். பிரதமர் மோடி கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலை மின் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து பாஜக தொடர்பாக பொதுக்கூட்டம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் பிரதமர் மோடி பங்கேற்க போவதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை தொடர்ந்து 15,000 போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையம் மற்றும் சென்னையில் சில முக்கிய இடங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.