புதுக்கோட்டை மாவட்டம் பூசுத்துறையை சேர்ந்த அருண் பிரசாத் வயது 32 இவர் எம்பிஏ படித்துவிட்டு போலந்து நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அந்தப் பணியில் இருந்து கொண்டே தனியாக கார்களை வாடகைக்கு விடும் டிராவல்ஸ் ஏஜென்சி ஒன்று வைத்துள்ளார்.
இவர் போலந்து நாட்டில் பணிபுரியும் போது அங்குள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் அணியா[எ] அண்ணா ரில்ஸ்கா ,இவர்கள் இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் முடிவுக்கு வந்துள்ளார். பிறகு இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டனர்.
போலந்து நாட்டின் முறைப்படி நிச்சயதார்தம் நடந்தது. அதைத் தொடர்ந்து, இவர்கள் இருவரின் திருமணம் நம் தமிழ்நாட்டின் முறைப்படி நடத்த முடிவெடுத்தனர். இதைதொடர்ந்து இன்று இருவீட்டாரும், உறவினர்கள் முன்னிலையில் புதுக்கோட்டை திருவப்பூர் அடுத்த அடப்பங்காராசத்திரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது
புதுக்கோட்டை சேர்ந்த பையனுக்கும், போலந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் நடந்து முடிந்தது கலந்து கொண்ட அனைவரும் மனதார வாழ்த்தினர், இந்த திருமணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது