சென்னை கலைவாணர் அரங்கில் நூறு ரூபாய் நாணயம் வெளியிடும் விழா நடைபெற்றது. இன்றைய தினம் கலைஞர் கருணாநிதி நூறாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்த விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை மந்திரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து நூறு ரூபாய் நாணயத்தை ராஜ்நாத்சிங் வழங்கினார். அதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்த நாணயத்தை பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் அமைச்சர்கள், எம். எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இந்த கூட்டணியில் பங்கேற்றுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி வருகையை முன்னிட்டு கலைவாணர் அரங்கே சுற்றி ஆயிரக்கணக்கான போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி, ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.