தமிழ்நாட்டில் தற்பொழுது புதிதாக ரேஷன் அட்டைகள் பதிவு செய்வதின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டு வரும் வகையில் புதிதாக ரேஷன் அட்டைகள் பதிவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது மேலும் குடும்ப அட்டை விநியோகிக்கும் பணியானது தற்பொழுது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து இணைய வழி மூலம் விண்ணப்பித்த 45,409 பேருக்கு விண்ணப்பங்கள் சரிபார்த்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. புதிய ரேஷன் கார்டு இல்லாத காரணத்தினால் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
தற்பொழுது தமிழக அரசு அறிவு போன்ற வெளியிட்டுள்ளது அதில் புதிய குடும்ப அட்டை செயல்பாட்டிற்கு வந்த பிறகு அதன் விவரங்களை குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது அந்த குறுஞ்செய்தியை நியாயவிலைக் கடைகளில் காண்பித்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் நியாய விலை கடைகளில் விதன்ட் ரேகை சரி பார்த்த பிறகே பொருட்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.