விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மிகவும் பிரபலமானது. இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
பெரியாழ்வார் மற்றும் அவரது வளர்ப்பு மகளான ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்களின் பிறப்பிடமாக இது கருதப்படுகிறது. இக்கோயில் மதுரையிலிருந்து 80 கி.மீ. பழங்கால திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட ஆலயம் ஆகும்
பிரசித்திபெற்ற ஆண்டாள் கோயிலில் திவ்ய பாசுரம் இசை கச்சேரி நடைபெற்ற நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்றார், பிறகு அங்குள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார் . இளையராஜாவிற்கு பூரணகும்ப மரியாதை செய்யப்பட்டது.
ஆண்டாள் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் ஜீயர்கள் சென்றார்கள் அப்போது இளையராஜாவும் உள்ளே செல்ல முற்பட்டார் இதை கவனித்த ஜியர்களும்,பட்டர்களும் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நின்று கொள்ளுமாறு அறிவித்தனர். வெளியே நின்று வழிபாடு செய்தார் இளையராஜா.
விதிமீறல்கள் இருப்பதாக கூறி இளையராஜா கருவறைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைய மறுக்கப்பட்ட செய்தி குறித்து பல தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பல விதமாக கூறி வருகிறார்கள்.