குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள் பாதுகாப்பு வலையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குடியரசு தின விழா ஜனவரி 26- ஆம் தேதி கோலாகலமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படும். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. குடியரசு தினத்தன்று ஆளுநர் ஆர்.என். ரவி தேசிய கொடியை ஏற்ற இருக்கிறார். இந்த தேசிய கொடி ஏற்றும் விழா மெரினா காமராஜர் சாலையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த சில நாட்களாகவே போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.
இதை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோவில்கள், பள்ளிக்கூடம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகள் போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிர படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளை கண்டறியும் நவீன மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று சென்னை முழுவதும் போலீசாரில் கண்காணிப்பில் கடந்த சில நாட்களாக பல சோதனைகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து சென்னையின் கடற்கரையோர பகுதிகளில் பலத்த பாதுகாப்பில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.