சனாதன தர்மத்தை பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது இதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து பி. கே. சேகர்பாபு மற்றும் மக்களவை உறுப்பினர் ஆ. ராசா ஆகியோரும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து இவர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது பலரிடம் பல எதிர்மறையான கருத்துக்களை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் உதய நிதி ஸ்டாலினின் சனாதன தர்ம பேச்சு இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து பல தரப்பினரும் இவர்களுக்கு எதிராக கண்டனக் குரலை எழுப்பி உள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதமாக பலமுறை விளக்கம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது மேலும் இதற்கான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.