வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்கி கடந்த இரண்டு நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழையானது பெய்து வருகிறது. இதை தொடர்ந்து கடந்த 12 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு இன்று அதி கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள் விடுமுறை என்ற நிலை இருந்தாலும் ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு ஆன்லைன் கிளாஸ் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியீட்ட அறிவிப்பில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் தொழில்நுட்பக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவே ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.