ஆகஸ்ட் மாதம் தொடக்கத்திலிருந்து பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் வியாழக்கிழமை தொடர்ந்து நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என சில பள்ளி கல்லூரிகள் அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர்.
மேலும் சுதந்திர தின விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வருகின்ற சனி, ஞாயிறு தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி வருவதால் திங்கட்கிழமை விடுமுறை நாள் என்பதால் தொடர் விடுமுறையாக பள்ளிக கல்லூரிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.