தமிழகத்தில் நாளை பல்வேறு மாவட்டங்களில் கோவில்கள் மற்றும் மசூதிகளில் பல்வேறு விழாக்களின் முன்னிட்டு விடுமுறை அறிவிக்கும் நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர திருவிழா நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து நாளை மேல்மருவத்தூர் சுற்றியுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆடிப்பூரத்தை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என அந்த மாவட்ட ஆட்சியர் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் ஆதிபராசக்தி சித்தர் பீடம் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிருந்து பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு வருகை தருவதை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.