பள்ளி தேர்வுகளை ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . தமிழ்நாட்டில் நாளை 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவடையும் நிலையில் , 10ஆம் வகுப்புக்கான பொது தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . மேலும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தேர்வை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
1ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தேர்வுகளை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது . மேலும் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது .