சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கம் குறையாத நிலையில் நாளை ( டி.8 ) சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மிக்ஜாம் புயலால் சென்னையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றது. இந்த புயலின் காரணமாக மிக கனமழை பெய்ததால் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது. சென்னை மக்களின் இயல்பு நிலை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ஏற்கனவே டிச. 4 முதல் டிச. 7 வரை விடுமுறை அறிவித்திருந்தது.
புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் தொடர்ந்து நிவாரண பணி நடைபெற்று வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் தற்பொழுது நாளை வெள்ளிக்கிழமை டிச. 8 அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.