கன்னியாகுமரியில் தற்பொழுது கடல் சீற்றமாக உள்ளது. இதை தொடர்ந்து மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். சுனாமிக்கு பிறகு அம்மாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் சீற்றம் போன்ற நிகழ்வு ஏற்படும் . இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல மாட்டார்கள்.
சுமார் 50 அடி தூரத்திற்கு கடல் உள் வாங்கியதால் கடலோர மக்கள் மிகுந்த பயத்திற்கு ஆளாகியுள்ளனர். ராட்சத அலையானது 10 முதல் 15 அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக வீசி வருகிறது. இதன் காரணமாக திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.