கடலில் குளிக்க சென்ற 3 பள்ளி மாணவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது .
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே நவ்வலடி கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் இவரது மகன் முகேஷ் வயது 13, அதே பகுதியை செர்ந்த வள்ளிமுத்து மகன் ஆகாஸ் வயது 13, இசக்கியப்பன் மகன் ராகுல் வயது 12 , மற்றும் பிரகாஷ் ஆகிய 4 பேரும் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இவர்கள் நால்வரும் கடலில் குளிக்க சென்றுள்ளனர் அப்போது எதிர்பாராதவிதமாக 4 பேரும் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர் .
அதில் முகேஷ், ராகுல், ஆகாஸ் ஆகிய மூவரும் கடலில் மூழ்கினர் . இதில் பிரகாஷ் தத்தளித்து கரைக்கு வந்துவிட்டார் பின்னர் அவர் ஊருக்குள் வந்து விவரத்தை கூர, அப்பகுதி மீனவர்கள் கடலில் 3 மாணவர்களையும் தேடினர். பின்னர் தகவல் அறிந்து வந்த உவரி போலீஸார், தீயணைப்பு படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டனர் இவரவு முலுவதும் தேடும் பனி நடந்தது . தேடும் பணியில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு இரவோடு இரவாக அங்கு வந்தார் .
நேற்று அதிகாலையில் 3 மாணவர்களின் சடலங்கள் கோடாவிளை அருகே கரை ஒதுங்கின . உடலை கைபற்றி நவ்வலடி கிரமத்திற்கு கொண்டுவந்தனர் . இதனால் அந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை 3 மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர் . பின்னர் உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளித்தார் .நிவாரண தொகையை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று மாலை வழங்கினார்.
இணையத்தில் வைரல் ஆனா வீடியோ
தற்போது , கடலில் மூழ்கி உயரிழந்த 3 மாணவர்கள் ஏற்கனவே வெளியிட்டிருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது அந்த வீடியோவில் “ ‘மச்சான் நான் சாகப் போறேன்டா’ என்று ஒருவர் சொல்ல ‘நானும் வரேன்டா மச்சான்’ என மற்றொரு சிறுவன் சொல்லி தனது நண்பனின் தோளில் கை போட்டுக்கொண்டு செல்கின்றனர்” . இவர்கள் விளையாட்டாக செய்த வீடியோ தற்போது உண்மையில் நடந்துவிட்ட சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .