கடந்த 21 தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது .
செந்தில் பாலாஜியின் சென்னை இல்லம் மற்றும் அவரது சட்டமன்ற அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் 14.6.2023 அன்று நள்ளிரவு 2 மணி அளவில் அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது.இதன் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலத்தை சோதனை செய்த மருத்துவர்கள் இதயத்தில் அடைப்பு உள்ளது எனவே அறுவை சிகிச்சை செய்ய வென்றும் என்று கூறினர் . பின்னர் அறுவை சிகிச்சை செய்வதின் காரணமாக அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் .அவரின் இதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து அவரது உடல் நிலையை மருத்துவர்கள் சீராக உள்ளதா என்று தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது இதயத்தில் உள்ள அடைப்புகளை அகற்றப்பட்ட நிலையில் ICU அவர் உள்ளார் என்றும் செந்தில் பாலாஜிக்கு vendilator கருவி அகற்றப்பட்டு செந்தில் பாலாஜியின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக காவேரி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.