அமலாக்க துறையின் மூலம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தொடர்ந்து ஒரு மாத காலங்களாக சிகிச்சையில் இருந்த செந்தில் பாலாஜி நேற்று மாலை புழல் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜிக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களை அடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டதை தொடர்ந்து இவர் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியின் உடல் நிலை நன்றாக குணமடைந்த பிறகு இவர் கைதி அறைக்கு மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும் செந்தில் பாலாஜி இதுவரை அமைச்சராக நீடிப்பதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முதல் வகுப்பில் சிறப்பான வசதிகள் மற்றும் சுவையான உணவுகளும் வழங்கப்படுகிறது.
பொதுவாகவே குழல் சிறை கைதிகளுக்கு காலையில் உணவு வெண் பொங்கல், கஞ்சி, உப்புமா இது போன்ற உணவுகள் மாறி மாறி வந்து கொண்டிருக்கும். முதல் வகுப்பு பிரிவை சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு இந்த உணவுகளில் மாற்ற உணவை கேட்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இட்லி தோசை இது போன்ற உணவுகளும் முதல் வகுப்பு கைதிகளுக்கு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இட்லி தோசை போன்ற உணவுகள் மற்ற கைதிகளுக்கு அளிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறை கைதிகளுக்கு மதிய உணவாக சாதம், சாம்பார், கூட்டு ஆகியவை வழங்கப்படும். இந்த உணவை முதல் வகுப்பு கைதிகள் விருப்பப்பட்டால் சாப்பிடலாம் இல்லையெனில் கேண்டீனில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடலாம்.
இதே போன்று இரவு உணவுகளும் அவர்கள் விருப்பம் போன்று விரும்பிய உணவுகளை சாப்பிடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் முதல் வகுப்பு கைதிகளுக்கு ஒரு வாரத்திற்கு மூன்று நாட்கள் கோழிக்கறி வழங்கப்படும் என்றும் அசைவ உணவு எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு சைவ உணவோடு நெய், வாழைப்பழம் இது போன்ற உணவுகள் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.