அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு சென்னை ஐ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை நிராகரித்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு மீண்டும் தாக்கல் செய்துள்ளார். அந்த ஜாமின் மனுவில் செந்தில் பாலாஜிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலியான ஆவணங்கள் தயார் செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதை ஜாமீன் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய் இருப்பதாகவும் அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்குமாறு மனதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி அல்லி செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து ஆதாரங்களை சரிபார்த்தார். செந்தில் பாலாஜி வங்கி கணக்கு திடீரென்று வரவு வைக்கப்பட்ட பல லட்சத்திற்கான ஆதாரம் ஏதும் சரியான முறையில் கிடைக்கவில்லை என்றும். செந்தில் பாலாஜி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்துள்ளார்.