அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமான பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்படுவதை காரணமாக கொண்டு நீதிமன்றத்தில் ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. செந்தில் பாலாஜி சட்ட விரோதமான முறையில் பணப்பரிமாற்றம் செய்த ஆதாரங்கள் அமலாக்கதுறை மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் போலியானது என்றும் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க கோரி 15 முறை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இன்று 15 வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதி அல்லி வருகின்ற 29ஆம் தேதி நீட்டிப்பு உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் மனு 16வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.