செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூலம் கைது செய்யப்பட்டார். மேலும் செந்தில் பாலாஜி சட்டவிரோத முறையில் பண பரிமாற்றம் செய்வதற்கான ஆவணங்கள் அமலாக துறையினர் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி மருத்துவ காரணத்திற்காக ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு வருகிறார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இன்று முதன்மை அமர்வு கோர்ட் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தன்னை கைது செய்யும் நோக்கில் அமலாக துறையினர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஜாமீன் மனுவை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் விசாரணைக்கு வர உள்ளது.