முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடந்தனர். செந்தில் பாலாஜியிடம் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஐகோர்ட் ஆனது செந்தில் பாலாஜியின் மனதை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர். செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்த மனுவை நீதிபதிகள் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
செந்தில் பாலாஜி ஜாமின் மனுவானது மீண்டும் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது அதை தொடர்ந்து நீதிபதிகள் அமலாக்கத் துறையினருக்கு கண்டனத்தை தெரிவித்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவை பிறப்பித்துள்ளனர்.