செந்தில் பாலாஜி சட்ட விரோதமான முறையில் பணப்பரிமாற்றம் செய்து அமலாக்கத் துறையின் மூலம் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டவர். தற்பொழுது வரை செந்தில் பாலாஜியின் சிறை தண்டனை நீட்டிக்கப்பட்ட வருகிறது.
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு இதுவரை மூன்று முறை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜி தொடர்ந்து மனு தாக்கல் செய்து வருகிறார். உயர் நீதிமன்றம் பல்வேறு தரப்பிலிருந்து விசாரணை நடத்தி செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து வருகிறது.
இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து தள்ளுபடி செய்து வருகிறார். இதை தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த மனு கூடிய விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.