சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாகத் துறையின் மூலம் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி பலமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருந்த போதிலும் செந்தில் பாலாஜியிடம் போதுமான ஆதாரம் இல்லாததால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்யுமாறு மனு தாக்கல் செய்திருக்கிறார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து பல வாதங்கள் முன்னெடுக்கப்பட்ட வைத்தது இருந்தபோதிலும் செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதால் அமலாக்க துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதத்தை முன் வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி வருகின்ற 28 – ஆம் தேதி செந்தில் பாலாஜியின் வழக்கில் முக்கிய தீர்ப்பை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.