முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத முறையில் பணம் பரிமாற்றம் செய்வதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து ஜாமீன் மனு கோரி பலமுறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் இவருடைய ஜாமீன் மனு நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் நீதிபதிகள் விவாதித்து அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து வந்தனர்.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி வரை நீட்டிக்க உத்தரவு பிறப்பித்த நிலையில் நேற்றைய தினம் புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி காணொளி காட்சி மூலமாக நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். இதைத் தொடர்ந்து நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21 வது முறையாக நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.