அமலாக்க துறையின் மூலம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது இதைத் தொடர்ந்து சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி இருதயத்தில் அடைப்பு இருப்பதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவ குழு செய்தியை வெளியிட்டு இருந்தது மேலும் தற்பொழுதுக்கு 5 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு முதலில் ஓமத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பரிசோதித்ததில் இதயத்தில் நான்கு இடத்தில் அடைப்பு இருப்பதாகவும் அதற்காக ஆஞ்சியோ செய்ய வேண்டும் என்றும் மருத்துவ குணம் கூறியிருந்தது. மேலும் இந்த ஆஞ்சியோ அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்றும் மருத்துவ குழு தரப்பில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.