செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக துறையினரால் 2023 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார் இதனிடையே அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் பலமுறை மனு தாக்கல் செய்து வந்தார். இதை தொடர்ந்து இன்று கரூர் அருகே ராமேஸ்வரபட்டியில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் மீண்டும் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.
செந்தில் பாலாஜி உடைய தம்பி அசோக்குமார் வீட்டிலும் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீட்டிலும் அமலாக துறையினர் அதிரடி சோதனையில் இறங்கி உள்ளனர். இந்த செய்தி அமைச்சர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் கல்குவாரி என 20 இடங்களில் வருமான வரி துறையினர் மூலம் சோதனை நடைபெற்றது. நேற்று காலை முதல் அமலாக துறையினரால் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் இன்று வரை தலைமறைவாகி உள்ளார் இதை தொடர்ந்து அசோகுமாரை பற்றி அவர் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அசோக்குமார் வீட்டில் உள்ள சிசிடி பதிவுகளையும் சோதனை செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து அசோக் குமாருக்கு லுக் – அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட உள்ள நிலையில் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.