அமலாக்க துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் நேற்று இரவு விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. இன்று இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியிடம்கேட்க சுமார் 200 கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் என்று கேட்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தும் பொழுது யாரையும் அங்கு அனுமதிக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். தற்போது விசாரணையின் பொழுது அவரது வழக்கறிஞர்ரையும் அனுமதிக்கவில்லை. கடந்த ஜூன் 16ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் அவருக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பின்பு இந்த விசாரணை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நேற்று திங்கட்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் அதற்கான தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்தது சட்டபூர்வமானது என்றும் இந்த கைது நடவடிக்கை செல்லுபடி ஆகும் என தெரிவித்திருந்தார். பிறகு உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து செந்தில் பாலாஜி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர்ரான என்.
ரமேஷ் நேற்று மாலை மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிபதியானஎஸ்.அல்லி முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது செந்தில் பாலாஜியின் உடல் நிலையை தாங்கள் கவனித்துக் கொள்வதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை எடுத்து ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எழுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது நீதிமன்றம்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து சிறை துறை அதிகாரிகளுடன் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இரவு 8 மணி அளவில் பலத்த பாதுகாப்புடன் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனி உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்துச் செல்லப்பட்டு விடிய விடிய விசாரணை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டாலும் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்க அனுமதி வழங்கப்பட்ட பின்னரே விசாரணை நடத்தப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது