Home » Blog » போக்சோ வழக்கில் கைதான தலைமை ஆசிரியருக்கு 2 ஆயுள் தண்டனை….!

போக்சோ வழக்கில் கைதான தலைமை ஆசிரியருக்கு 2 ஆயுள் தண்டனை….!

by Pramila
0 comment

போஸ்கோ வழக்கில் கைதான தலைமையாசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை , 47 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை விதித்துள்ளது போக்சோ சிறப்பு நீதிமன்றம் .

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய முருகன் வயது 54 . கடந்த 2014ஆம் ஆண்டு பள்ளியில் பயின்ற ஆறாம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் குற்றம் புரிந்ததாக சிறுமியின் பாட்டி சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து அவரை கொக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் .

மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ் இன்று மதியம் ஆறு குழந்தைகளின் மீது பாலியல் குற்றம் புரிந்த முருகன் என்பவருக்கு தண்டனையாக இரட்டை ஆயுள் தண்டனையும் 47 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் , 69 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் .

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இருந்து ரூபாய் 29 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார் .

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.