மக்களுக்கு கவரும் வகையில் எண்ணற்ற வகை உணவுகள் பிரபலமாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் உணவுகளை பதப்படுத்தி வைக்கப்படும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி தயார் செய்யப்படும் ஸ்மோக் பிஸ்கட், ஸ்மோக் பீடா உள்ளிட்ட உணவு வகைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.
இப்பொழுது நடக்கும் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் திருமண வரவேற்புகள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் மனிதர்களை கவரும் வகையில் பல உணவு வகைகள் தயார் செய்து வைக்கின்றனர். ஆனால் அந்த உணவு வகைகளின் சுவையும் மட்டுமே நம் பார்க்கிறோம் அதன் தீமைகளை பார்ப்பதில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அந்த உணவுகளின் தாக்கம் தெரியாமல் சாப்பிட்டு வருகிறோம்.
அண்மையில் சமூக வலைதளங்களில் மிக வைரலாக பேசப்பட்ட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் பொருட்காட்சியில் ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்டு மூச்சுத்திணறல் வந்து மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டான். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பகிரப்பட்டு வந்தது.
இந்த செய்திக்கு பிறகு ஸ்மோக் பிஸ்கட் மற்றும் ஸ்மோக் பீடா போன்ற உணவு வகைகளை தடை செய்யக்கோரி பல குரல்கள் எழுந்தது. இதன் காரணமாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் நைட்ரஜன் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என்றும் அதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும் உணவு விடுதிகளில் நைட்ரஜன் கலந்த ஐஸ் வகைகள், பிஸ்கட் வகைகள் போன்றவை விற்பனை செய்யக்கூடாது என்றும் மீறி விற்பனை செய்தால் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நைட்ரஜன் கலந்த உணவு வகைகளை சாப்பிடும் பொழுது குழந்தைகளுக்கு கண் பார்வை மற்றும் உடலில் பல கோளாறுகளும் ஏற்பட வழிவகுக்கும் மேலும் உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படலாம் என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.