நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அதற்கான முதல் மாநாட்டை நடத்தியுள்ளார். இதை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பல கட்சித் தலைவர்களும் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்ற நிலையில் சபாநாயகர் அப்பாவு அவரது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் மாநாட்டின் போது பல கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் முன்னெடுத்து வைத்துள்ளார். இதை தொடர்ந்து திமுக பணம் சம்பாதிப்பதற்காக அரசியலில் இருப்பதாக விமர்சனம் செய்துள்ளார்.
இதை தொடர்ந்து மற்றவர்களை குறை சொல்லும் பொழுது தான் உண்மையாக இருக்கிறோமா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
பாஜகவில் சில முக்கிய தலைவர்களுடன் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நெருக்கமாக பழகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து பாஜகவினர் ஏற்பாடு செய்த புதிய கட்சிதான் விஜயின் தமிழக வெற்றி கழகம் என்றும் பாஜகவின் பி டீம் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.