தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் ரம்ஜான் தொழுகையானது கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் இன்று ரம்ஜான் பண்டிகையானது கொண்டாடப்படும் நிலையில் கேரளா மற்றும் வளைகுடா நாடுகளில் நேற்றைய தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் நேற்றைய தினம் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்றைய தினம் ரம்ஜான் பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவை ஒட்டி உள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் ரம்ஜான் பண்டிகை ஆனது கொண்டாடப்பட்டது. திருவிதாங்கோட்டில் நேற்று முன்தினம் பிறை கண்டதை அடிப்படையாகக் கொண்டு நேற்று சில இடங்களில் ரம்ஜான் பண்டிகை மற்றும் சிறப்பு தொழுகை ஆனது நடைபெற்றது.
தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளிலும் நேற்றைய தினம் ஆனது ரம்ஜான் சிறப்பு தொழுகை மற்றும் ரம்ஜான் பண்டிகையானது கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் பல இடங்களில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் இன்றைய தினம் ரம்ஜான் பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் விதமாக அனைத்து மதத்தினருக்கும் இனிப்புகள் வழங்கியும் ஏழை மக்களுக்கு உணவுகள் வழங்கியும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.