சேலம் மாவட்டம் மரவனேரி பகுதியைச் சேர்ந்த மதன்கிருஷ்ணன் இவர் இவரது மகன் சாரதி இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
சாரதி இந்த வருடம் பத்தாம் வகுப்பு எனவே அதிக அளவு வீட்டுப்பாடம் பள்ளி ஆசிரியர்கள் கொடுத்துள்ளனர். இதை தொடர்ந்து சில நேரங்களில் வீட்டு பாடங்களை சரியாக செய்து வராததை கண்டித்து பள்ளி ஆசிரியர்கள் சாரதியை கண்டித்துள்ளனர். இதன் காரணமாக சாரதி பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார்.
இதை தொடர்ந்து சாரதியின் பெற்றோர் சில அறிவுரைகளையும் கூறியுள்ளனர். ஆனால் சாரதி பள்ளிக்கு வர விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த சாரதி அவரது சகோதரனிடம் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என்று கூறியுள்ளார். இதற்கிடையில் சாரதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சாரதியின் உடலை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு எடுத்த சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சாரதி உயிரிழந்து விட்டார். மாணவன் இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.