சட்டநாதபுரம் வேங்கடராமன் சேகர் இந்திய நடிகர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் தமிழ் மொழி நாடகங்களில் நாடக ஆசிரியரும் ஆவார். 2006 ஆம் ஆண்டு மயிலாப்பூரில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடிகர் எஸ்.வி. சேகருக்கு, பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பகிர்ந்ததற்காக, சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களை விமர்சித்து ஒரு பதிவை பகிர்ந்தார். இதனால், அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்யக்கூடிய சென்னை சிறப்பு நீதிமன்றம் எஸ் வி சேகருக்கு ரூபாய் 15,000 அபராதம் மற்றும் ஒரு மாத சிறை தண்டனையும் வழங்கியுள்ளது, அந்த தீர்ப்பை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆயினும், உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.