மீனவ மக்களின் தெய்வமாக பார்க்கப்படுவது கடல் தான் ஒவ்வொரு நாளும் கடலோசையை கேட்காமல் அவர்களின் நாட்கள் போவதில்லை, அலையின் ஓசை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இதமான ஒன்று எந்த அளவிற்கு கடலின் அலை அழகானதோ அதே அளவிற்கு அதன் அலைகளும் ஆபத்தானது. இந்த ஆபத்தை உணர வைத்தது 2004 ( டிசம்பர் 26 ) 19 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் கடலின் கோர தாண்டவம் ஆடியது சுனாமி ஆழிப் பேரலையாக உருவெடுத்து 30 மீட்டர் உயரம் வரை எழுந்து 14 நாடுகளில் உள்ள கடலோரப் பகுதிகளை தாக்கி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இரக்கம் இல்லாத அரக்கனாக மாறிய கடல் அலைகள் சுனாமியாக உருவெடுத்து பல உயிர்களைக் கொன்று குவித்தது. இந்தியா மட்டுமின்றி இலங்கை, இந்தோனேஷியா, மாலத்தீவு, மலேசியா, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கரையோரம் சுனாமியின் கோரத்தாண்டவத்தை காட்டியது இதனால் 2 லட்சத்து 29 ஆயிரம் பேர் சுனாமியின் பேரலையில் காணாமல் சென்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சுனாமியின் தாக்கம் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. சுனாமியின் பிடியில் சிக்கி 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இறந்தனர். ஆண்டுதோறும் சுனாமி தாக்கி இறந்தவர்களுக்கு டிசம்பர் 26 நாள் கடற்கரையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.