நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகை தமன்னா சட்ட விரோதமான ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய விளம்பரங்களில் நடித்தது தொடர்பாக அமலாக துறையினர் நேற்று சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் நடிகை தமன்னா.
இந்த விசாரணையானது குறைந்த பட்சம் 5 மணி நேரம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை முடிந்த பின்பு இதை பற்றிய முழு விவரங்களையும் அமலாக்க துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.