கடந்த 2021 திமுக அரசு பொதுத் தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது . இதைதொடர்ந்து செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அதன்படி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிப்பதற்காக தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாளைக்கு முகாம் அமைக்கபடும் .
இந்த விண்ணப்பமானது 2 கட்டங்களாக நியாயவிலை கடைகள் மூலம் விண்ணப்பங்களை விநியோகம் செய்யப்பட்டது, முதல் கட்டமாக கடந்த ஜூலை 24 முதல் ஆக.4 வரை முகாம் நடத்தப்பட்டது. இதில் 20,765 நியாயவிலை கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு சுமார் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
2-ம் கட்ட முகாம் ஆக.5 முதல் ஆக.14 வரை நடைபெற்றது. இதுவரை பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 1.54 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு கட்டங்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் . இந்த ஆக.18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது , இந்த சிறப்பு முகாம்கள் காலை 9.30 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 5.30 மணி வரையும் நடைபெறும் .
இதற்கு தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின்கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் கொண்டு செல்ல வேண்டும் மற்றும் வருவாய் சான்றிதழ், சொத்து விவரங்களை எடுத்து வர வேண்டாம் என்றும் அறிவித்துள்ளனர் .