கடந்த சில நாட்களாகவே மும்மொழி கொள்கை திட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து பாஜக மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கும் விதமாக சமக் கல்வி எங்கள் உரிமை என்ற தலைப்பில் நேற்றைய தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் முன்னிலையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில். சமக் கல்வி பாடல் மற்றும் சமக் கல்வி இணையதளம் என பல திட்டங்களை தொடங்கி வைத்துள்ளனர்.
மேலும் தடைகளை மீறி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டதை தொடர்ந்து தமிழிசை சௌந்தர்ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழிசை சௌந்தர்ராஜனின் இந்த கைது சம்பவம் பாஜகவினருடைய பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழிசை சௌந்தர்ராஜன் போலீஸ் வாகனத்தில் ஏறுவதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே போலீஸ் தரப்பிலிருந்து மற்றொரு நாள் அனுமதியுடன் கையெழுத்து இயக்கத்தை நடத்துங்கள் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.