நாமக்கலில் ஓரி திருவிழா நடைபெறும் வருடம் ஒரு முறை,இந்த விழாவையொட்டி 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஓரி மன்னனின் வீரத்தையும்,கொடையையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 தேதிகளில், அரசு சார்பில் ஓரி திருவிழா நடத்தப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்த திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை ப்பட உள்ளது. அது மட்டும் இன்றி வல்வில் ஓரி திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை டாஸ்மார்க் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா அறிவித்துள்ளார்.
இந்த விழாவில் அரசின் பல்துறை பணிவிளக்கு கண்காட்சி மற்றும் பல துறைகள் ஒருங்கிணைந்து கலை நிகழ்ச்சிகள் மலர்கண்காட்சி மூலிகை செடிகள் போன்ற கண்காட்சிகள் நடைபெற உள்ளது.
டாஸ்மாக் மூன்று நாள் விடுமுறை இதன் படி கொல்லிமலை செம்மேடு, செங்கரையில் உள்ள டாஸ்மார்க் மற்றும் சோளக்காடுகளில் உள்ள டாஸ்மார்க் கடைகளை மூட உத்தரவு விட்டுள்ளார் உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பன்னிரெண்டாம் தேதி சனிக்கிழமை அன்று விடுமுறை நாட்களை ஈடு கட்டுவதற்காக பணி நாளாக தெரிவித்துள்ளார்.