தஞ்சையில் வருடம் தோறும் தியாகராஜ ஆராதனை விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த வருடம் 177-வது ஆராதனை விழா கொண்டாடப்பட உள்ளது. வருகின்ற 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தியாகராஜ ஆராதனை விழா தொடங்க உள்ளது. 26 ஆம் தேதி முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்களும் அபிஷேகங்களும் நடைபெற உள்ளது.
வருகின்ற 30-ஆம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து காலை 8.30 மணியளவில் மங்கள இசை கச்சேரியும் நடைபெறுகிறது. தியாகராஜர் பல்லாக்கில் இரவு 8 மணி அளவில் வீதி உலா காட்சி நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து இரவு 11 மணி அளவில் ஆஞ்சநேயர் உற்சவத்துடன் தியாகராஜ ஆராதனை விழா நிறைவு பெறுகிறது.
177- வது தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு வருகின்ற 30ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.